இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேவிட் ஜான்சன் (52) பெங்களூருவின் வீட்டு பால்கனியில் இருந்து தவறிவிழுந்து உயிரிழந்தார். 1996ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இவர் இந்தியாவுக்காக களம் இறங்கி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது மறைவுக்கு அனில் கும்ப்ளே, ஜெய் ஷா உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.