கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து வரும் 24ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழக முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மாவட்ட தலைநகரங்களில் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டது என்றும், விஷச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.