விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இந்த தேர்தலில் என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தலைவர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், அதிகாரம், ஆணவம் தான் மக்களவைத் தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்க காரணம் என்று விமர்சித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்