ரிமோட் கேட்டில் சிக்கி பேரன் இறந்த அதிர்ச்சியில் பாட்டியும் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் மலப்புறம் திரூரில் ரிமோட் மூலமாக இயங்கும் கேட்டில் சிக்கி ஒன்பது வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் அந்த அதிர்ச்சியில் சிறுவனின் பாட்டியும் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். நேற்று பக்கத்து வீட்டில் உள்ள ரிமோட் கேட்டில் சிக்கி சிறுவன் உயிரிழந்த நிலையில் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.