கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 30 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 156 பேர் என்றும் அவர்களில் 49 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக கூறினார். மேலும் பலருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் ஐசியூவில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.