கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட வீடுகளில் உள்ள குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் இருந்து 5க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வீடு வீடாக சென்று இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 30க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.