சென்னை அடுத்த மாங்காட்டில் 16 வயது சிறுவனை ராட் வைலர் நாய் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வீட்டின் முன்பு நின்று இருந்த சிறுவன் துஜேஸை ராட்வைலர் நாய் கடித்து குதறியுள்ளது. நாயின் உரிமையாளர் நாயை நடை பயிற்சிக்கு அழைத்துச் சென்றபோது சிறுவனை கடித்துக் குதறியுள்ளது. நாய் கடித்து காயம் அடைந்து சிறுவன் துஜேஷ் பூந்தமல்லி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காயம் அடைந்த சிறுவனின் பெற்றோர் நாய் உரிமையாளர்கள் நிலா, கார்த்திக் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.