கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் ஆளுநர் ஆர்.என் ரவியை சந்திக்க அதிமுகவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பேரவையில் விவாதிக்குமாறு தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர். அதனை தொடர்ந்து நடவடிக்கையை ரத்து செய்த சபாநாயகர் அவர்கள் மீண்டும் அவைக்கு வர அழைப்பு விடுத்தார். அதனை நிராகரித்து அதிமுகவினர் ஆளுநரை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.