கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தியதில் இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 30 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் விஷ சாராயம் அருந்தியதில் பலர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், உயிரிழந்தவர்களுக்கு இரங்கலும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதலும் கூறியுள்ளார். மேலும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் உயிர் காக்கும் மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.