கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தியதில் இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 30 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் தாய் தந்தையை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். குறிப்பாக அவர்கள் பட்டப்படிப்பு வரை கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் என அனைத்து கட்டணங்களையும் தமிழக அரசு வழங்கும் என முதல்வர் உறுதி அளித்துள்ளார்.