ஆந்திராவில் 21 சட்டசபை தொகுதிகளிலும், இரண்டு மக்களவைத் தொகுதிகளிலும் ஜனசேனா கட்சி வென்றது. அதைத்தொடர்ந்து துணை முதல்வராக அக்கட்சித் தலைவர் பவன் கல்யாண் நேற்று பொறுப்பேற்றார். இந்த நிலையில் துணை முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக சட்டசபைக்கு வருகை தந்த அவரை ஆரத்தழுவி வரவேற்றார் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு. அதேபோல பூங்கோத்து கொடுத்து சந்திரபாபு நாயுடுவை வரவேற்றார் பவன் கல்யாண். மேலும் இருவரும் ஒன்றாக சட்டசபையில் சந்திப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.