தனது குடும்பத்தை பற்றி அவதூறாக பேசியதால் சந்திரபாபு நாயுடு கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சட்டமன்றத்தை விட்டு வெளியேறினார். முதலமைச்சரான பின்பு தான் சட்டமன்றத்தில் காலடி எடுத்து வைப்பேன் எனவும் சபதம் செய்தார். இந்த நிலையில் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி மெகா வெற்றி பெற்ற நிலையில் முதல்வராக பொறுப்பேற்றுள்ள சந்திரபாபு நாயுடு 31 மாதங்களுக்குப் பிறகு சட்டமன்றத்திற்கு இன்று வருகை தந்தார்.