மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் ஜாம்னரில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை காவலில் எடுக்க வேண்டும் என்று கடந்த வியாழக்கிழமை இரவு சிலர் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் காவல் நிலையம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 14 போலீசார் காயம் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர் போலீஸ் நிலையத்திலிருந்து தப்பிச் சென்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.