ஹரியானாவை சேர்ந்த விஜய் தாபா என்ற 20 வயது இளைஞர் சில மாதங்களாக சென்னையில் தங்கி பணியாற்றி வருகின்றார். இவருக்கு செல் போன் செயலி மூலமாக வடபழனியில் உள்ள பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் உல்லாசம் அனுபவிக்க விஜய்யை அழைத்துள்ளார். அதன் பிறகு உல்லாசமாக இருந்துவிட்டு பேசிய பணத்தை விட அதிகமாக பணம் கேட்டுள்ளார்.
அதற்கு விஜய் மறுப்பு தெரிவித்த நிலையில் அறையில் மறைந்திருந்த திருநங்கை மற்றும் இளம் பெண் உட்பட நான்கு பேர் வந்து மிரட்டி 12 ஆயிரம் ரூபாயை பிடுங்கி உள்ளனர். மேலும் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டி பணம் கேட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து விஜய் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த நான்கு பேரை கைது செய்துள்ளனர்.