கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்றவர்களுடன் தங்களுக்கு உள்ள தொடர்பை நிரூபித்தால் பொது வாழ்வில் இருந்து விலகுகிறோம் என்று திமுக எம்எல்ஏக்கள் உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் கூறியுள்ளனர். கள்ளக்குறிச்சி சாராய வியாபாரிகளுடன் இவர்களுக்கு தொடர்பு என்று இபிஎஸ், ராமதாஸ் மற்றும் அன்புமணி குற்றம் சாட்டி இருந்தனர். இதனை கண்டித்துள்ள இருவரும் தங்கள் மீது அவதூறு பரப்பியவர்களுக்கு எதிராக மான நஷ்ட வழக்கு தொடர்வோம் என்றும் எச்சரித்துள்ளனர்.