கிராமங்களில் மக்கள் உணவுப் பொருட்களை எளிதாக பெறும் வகையில், ரூ.60 கோடி மதிப்பீட்டில் முழு நேரம் இயங்கும் 500 நியாய விலைக்கடைகள் கட்டப்படும். 5,000 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் இணையம் மூலம் தானியங்கி ஆன்/ஆப் இயக்க அமைப்புகள் நிறுவப்படும். மேலும், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் புனரமைப்புப் பணிகள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் தமிழக அரசு அறிவித்துள்ளது.