தமிழகம் முக்குவதும் நகர்ப்புறங்களில் சுற்றித் திரியும் மாடுகளை, அதன் உரிமையாளர்கள் கட்டுப்படுத்தாவிட்டால் ஏலத்தில் விடப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அவர், சென்னை போன்ற பெருநகரங்களில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
அதன்படி முதல்முறை ரூ.5000, 2ஆம் முறை ரூ.10000 அபராதம் விதிக்கப்படும் என்றார். இதே நிலை தொடர்ந்தால் மாடுகள் ஏலம் விடப்படும் எனவும் எச்சரித்தார்.