விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாத கோழையாக முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார். கள்ளச்சாராய விற்பனையை திமுக அரசு தடுக்கவில்லை எனக் கூறிய அவர், காவல்துறை முதல்வர் ஸ்டாலினின் ஏவல் துறையாக மாறியுள்ளதாக விமர்சித்துள்ளார். மேலும், தமிழகத்தில் சாராய சாம்ராஜ்யத்தை நிறுவிய கருணாநிதி வழியில் அவரது மகன் ஸ்டாலின் நடப்பதாகவும் விமர்சித்தார்.