நடிகர் விதார்த் நடிப்பில் இந்த வாரம் ‘லாந்தர்’ படம் வெளியாகி இருக்கிறது. இதற்காக, திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்க்க வந்தவர் பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்திருப்பது வருத்தமளிக்கிறது. இதில் யாரையும் நான் குறை சொல்ல விரும்பவில்லை. நம்மளை நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கள்ளக்குறிச்சியில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.