பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு விரும்புவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல், டீசலை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஜிஎஸ்டி வரியை கொண்டு வந்ததாக கூறிய அவர், மாநில அரசுகள் ஒன்றுகூடி பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.