உத்திரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தைச் சேர்ந்த சுஜித் என்பவர் தனது மனைவி மீது சந்தேகப்பட்டு வந்துள்ளார். அவர்களுக்கு பிறந்த குழந்தை தனது இல்லை என கூறி தனது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 20ஆம் தேதி, தனது ஒரு வயது மகனை, சுஜித் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சுஜித்தை கைது செய்தனர்.