திருப்பூர் மாவட்டம் பல்லடம் ரோட்டில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக திருப்பூர் தெற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த சென்டருக்கு போலீசார் நேற்று சென்று சோதனை நடத்திய போது அங்கு விபச்சாரம் நடந்தது தெரியவந்தது. அங்கிருந்து 3 அழகிகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது குறித்த விவகாரத்தில் மேலாளர் ஆன கோவை மதுக்கரையை சேர்ந்த பிரபு மற்றும் பொறுப்பாளரான திருப்பூரை சேர்ந்த ஜெயா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.