தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் வாரத்தில் அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்யப்படும். ஓசூர், திருப்பூர், கும்பகோணம், காஞ்சிபுரம், கரூர் ஆகிய மாநகராட்சிகள் மற்றும் எடப்பாடி, மதுராந்தகம், திருவண்ணாமலை, சிதம்பரம் உள்ளிட்ட நகராட்சிகளில் 76.30 கோடியில் பேருந்து நிலையங்கள் மேம்படுத்தப்படும் என தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிவித்துள்ளது.