தூத்துக்குடி அருகே கார் மோதிய விபத்தில் உயிரிழந்த 3 பெண்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தலா ₹3 லட்சமும், காயமடைந்தவருக்கு ₹1 லட்சமும் நிவாரண உதவி அறிவித்துள்ளார். முக்காணி பகுதியில் இன்று காலை சாலையின் ஓரம் தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதியது. இதில், 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, மேலும் ஒருவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.