திருப்பூர் மாவட்டம் பல்லடம் ரோட்டில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக திருப்பூர் தெற்கு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த சென்டருக்கு போலீசார் சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு விபச்சாரம் நடந்தது தெரியவந்தது.
அங்கிருந்து 3 அழகிகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக மேலாளரான கோவை மதுக்கரையை சேர்ந்த பிரபு, பொறுப்பாளரான ஜெயா (28) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.