பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கட்டுமானத்தில் இருந்த பாலம் இடிந்து விழுந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சிறிய பாலம் இடிந்து விழுந்துள்ளது. மோதிஹாரியில் ரூ.1.5 கோடியில் 40 அடி நீளத்தில் பாலம் கட்டப்பட்டு வருகிறது.
போதிய சிமெண்ட் மற்றும் மணல் இல்லை எனவும், சென்ட்ரிங் பைப்புகள் பலவீனமாக இருப்பதாகவும் கிராம மக்கள் ஏற்கனவே குற்றம் சாட்டிய நிலையில், இன்று அதிகாலை பயங்கர சத்தத்துடன் பாலம் திடீரென விழுந்து விழுந்துள்ளது.