கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது. இதில் 5 பெண்களும் அடங்குவர். தொடர்ந்து 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் 12 பேர் முழுமையாக கண்பார்வையை இழந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் இதுவரை 12 பேரை கைது செய்த சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.