திருச்சி காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் 2022 உள்ளாட்சித் தேர்தலில் ஐஜேகே கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கருணாகரன். இவர் தேர்தலின் போது பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்வதாகவும், அதனை செய்ய தவறினால் பதவியை ராஜினாமா செய்வதாகவும் வாக்குறுதி வழங்கினார். இந்நிலையில், கொடுத்த வாக்குறுதிகளை செய்ய முடியவில்லை என்று அவர் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.