மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் டிடிபி, ஜேடியூ ஆதரவுடன் பாஜக ஆட்சியமைத்துள்ளது. இதன்படி அக்கூட்டணி பலம் 293ஆக உள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகளின் பலம் 243ஆக உள்ளது. 2014, 2019 மக்களவையுடன் ஒப்பிடுகையில் எதிர்க்கட்சி கூட்டணியின் பலம் இம்முறை உயர்ந்துள்ளது. இதனால் இந்த மக்களவைக் கூட்டத் தொடரில் பாஜகவுக்கு எதிர்க்கட்சிகளால் பல்வேறு சவால்கள் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது.