நடப்பு தொடரில் கற்ற பாடங்களில் இருந்து மேலும் வலுப்பெறுவோம் என அமெரிக்க அணி கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சூப்பர் 8 சுற்றில் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்த அமெரிக்கா, உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது. இதுகுறித்து பேசிய அவர், “இது எங்களது முதல் உலகக் கோப்பை தொடர். நாங்கள் சூப்பர் 8க்கு தகுதிபெறுவோம் என பலரும் நம்பவில்லை” எனக் கூறியுள்ளார்.