பெண் காவல் அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சவுக்கு சங்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசிய ஆடியோ ஒன்று லீக்காகி வைரலாகி வருகிறது. அதில், எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவை வழி நடத்தும் திறன் இல்லை. 2026க்கு பிறகு அதிமுகவை வேலுமணி வழிநடத்துவார். அதற்கான வேலைகளை அவர் பார்த்து வருகிறார் என பகிரங்கமாக பேசியுள்ளார். சவுக்கு சங்கரின் இந்த பேச்சுக்கு, அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.