இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ள ஏர்டெல் நிறுவனம் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஒன்பது ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 10 ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இதற்கான வேலிடிட்டி ஒரு மணி நேரம் மட்டுமே. பெரிய பைல்கள் மற்றும் படங்கள் ஆகியவற்றை டவுன்லோட் செய்ய இந்த திட்டம் பயன்படும். மற்ற நிறுவனங்கள் 10 ஜிபி டேட்டாவை 100 ரூபாய் வரை விற்கின்றன.