ATM-ல் பணம் எடுப்பதைப்போல அமெரிக்காவில் துப்பாக்கி குண்டுகளை உடனடியாக பெறக்கூடிய வகையில் மளிகை கடைகளில் பிரத்யேக இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இது அலபாமா, ஒக்லாஹோமா மற்றும் டெக்ஸாஸ் ஆகிய மாகாணங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு இடங்களில் விரிவுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அடையாள அட்டையை காண்பித்து, உரிய பணம் செலுத்தி தேவையான குண்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.