இன்றைய காலத்தில் படித்த படிப்பு வேலை கிடைக்காமல் பலர் திண்டாடிவரும் நிலையில், கரும்புச் சாறு கடையில் வேலை பார்க்க BE, B.Sc படித்தவர்கள் தேவை என்ற போஸ்டர் வைரலாகி வருகிறது. அதில் காலை 8:30 – இரவு 9:30 மணி வரை வேலை நேரம் எனவும், ₹18,000 சம்பளம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த அந்த கடை உரிமையாளர், வேலை இல்லாத இளைஞர்களுக்காக இந்த வாய்ப்பை உருவாக்கியதாகத் தெரிவித்துள்ளார்.