நெல்லை மருதகுளம் அரசுப் பள்ளி மாணவன் மீது சாதி ரீதியிலான தாக்குதல் நடத்திய சக மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொன்னாக்குடி மற்றும் மாயனேரி கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களிடையே நேற்று மோதல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஊர் பேரைக் கேட்டு சாதியை தெரிந்துகொண்டு சிலர் தாக்குதல் நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், போலீசார் 7 மாணவர்களை கைது செய்துள்ளனர்