ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அதிமுக அறிவித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை நடத்தினார். இதில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அதிமுக முடிவெடுத்துள்ளது.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு உள்ளதால் இடைத்தேர்தலில் புறக்கணிக்கிறோம் என அதிமுக தெரிவித்துள்ளது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு உள்ளதால் இடைத்தேர்தலில் புறக்கணிக்கிறோம் என அதிமுக தெரிவித்துள்ளது. மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விட மாட்டார்கள் என்பதால் தேர்தலை புறக்கணிப்பதாகவும், அதிமுக தேர்தலை கண்டு அஞ்சுகின்ற இயக்கம் இல்லை என்றும், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதால் தேர்தலை புறக்கணிக்கிறோம். பணபலம் படை பலத்துடன் அராஜகங்கள் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவார்கள் என ஈபிஎஸ் தெரிவித்துள்ளார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெல்லும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விட மாட்டார்கள் என்பதால் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.