விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாமக சார்பில் சி.அன்புமணி போட்டியிடுவார் என ராமதாஸ் அறிவித்துள்ளார் பாமக மாநிலத் துணைத் தலைவர் சி அன்புமணியை வேட்பாளராக அறிவித்தார் நிறுவனர் ராமதாஸ். விக்கிரவாண்டி கூட்டணி கட்சியான பாமக போட்டியிடும் என பாஜக கூறிய நிலையில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் நிலையில், ஜூலை 13 ரிசல்ட் வெளியாகும். விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.