விழுப்புரம் விக்கிரவாண்டி பகுதியில் சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட ஏழு பேரில் ஐந்து நபர்களின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக விழுப்புரம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர்களை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மீதமுள்ள இரண்டு நபர்கள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் விளக்கமளித்துள்ளது.