பி எஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஆற்காடு சுரேஷின் தம்பி புன்னை பாலா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். தனது அண்ணன் ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாகவும், அவரது ஆதரவாளர்கள் தன்னையும் மிரட்டியதாகத் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆற்காடு சுரேஷ் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பழி தீர்க்கும் வகையில் இக்கொலை நடந்ததாக பாலா தெரிவித்துள்ளார்.