விஷச்சாராயம் அருந்தி 50 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குழந்தைகள் எந்த பள்ளியில் படிக்கின்றனர் என்பது குறித்த கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. வீடு வீடாகச் சென்று அங்கன்வாடி பணியாளர்கள் இந்தப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும் எனக் கூறிய நிலையில், தற்போது இந்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.