அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க கோரிய மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் ஜூலை 16ஆம் தேதியே உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி அல்லி அறிவித்துள்ளார். இது செந்தில் பாலாஜி தரப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.