செந்தில் பாலாஜியின் காவலை 41ஆவது முறையாக நீட்டித்து சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடை சட்ட வழக்கில் கைதாகி ஓராண்டுக்கு மேல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீதான உத்தரவை தள்ளிவைக்க முறையீடு செய்திருந்தார். இந்நிலையில், காணொலி வாயிலாக இன்று ஆஜர்படுத்தப்பட்ட அவரின் காவல் ஜூலை 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.