மாநிலங்களுக்கு ரூபாய் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 750 கோடி வரி பகிர்வை அளித்தது மத்திய அரசு.
தமிழ்நாட்டிற்கு 5,700.44 கோடியை வரி பகிர்வாக விடுவித்துள்ளது மத்திய அரசு. அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு 25,069.88 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. மத்திய பிரதேசத்திற்கு 10,970.44 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. மேற்கு வங்கத்திற்கு 10,513.46 கோடி விடுவிக்கப்பட்டது. கர்நாடகாவுக்கு 5,096.72 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பீகாருக்கு 14,056.12 கோடி, மகாராஷ்டிராவுக்கு 8,828.08 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.