காதல் விவகாரத்தில் விருதுநகரை சேர்ந்த அழகேந்திரன் என்ற பட்டியலின இளைஞர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், தொடரும் சாதி ஆணவப்படுகொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும், பாராமுகமாக இருந்து கடமை தவறிய காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.