திமுக எம்பி தயாநிதி மாறன் மீது சென்னை மத்திய குற்ற பிரிவில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீதான கோவை காவல் நிலைய வழக்கு சென்னை மத்திய குற்ற பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு பட்டியல் இன மக்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.