நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர், இம்முறை பட்ஜெட் கூட்டத் தொடராக நடைபெறுகிறது. இக்கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. ஆகஸ்ட் 12 வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இரு அவைகளிலும் தலா 19 முறை அமர்வு நடைபெறவுள்ளது. இன்று பொருளாதார ஆய்வறிக்கை, நாளை முழு பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். கூட்டத்தொடரில் 6 மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது.