முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். 1991 1996 அமைச்சராக இருந்த அவர், ₹1.15 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிறை தண்டனை பெற்றார். அதன் மேல் முறையீட்டு மனுவில் தண்டனையை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது. அரங்கநாயகம் இறந்துவிட்டதால் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.