யுஜிசி நெட் (UGC NET) ஜூன் 2024 தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என தேசிய சைபர் கிரைமிலிருந்து யுஜிசிக்கு கிடைத்த தகவலால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு செயல் முறையின் வெளிப்படை தன்மை புனிதத்தை உறுதி செய்யும் நோக்கில் யுஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு நகரங்களில் யுஜிசி நெட் 2024 தேர்வு நேற்று நடைபெற்ற நிலையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
“தேர்வு செயல்முறையின் மிக உயர்ந்த வெளிப்படைத்தன்மை மற்றும் புனிதத்தன்மையை உறுதி செய்வதற்காக, UGC-NET ஜூன் 2024 தேர்வை ரத்து செய்ய இந்திய அரசின் கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ஒரு புதிய தேர்வு நடத்தப்படும், அதற்கான தகவல்கள் தனித்தனியாக பகிரப்படும். அதே நேரத்தில், இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணைக்காக இந்த விவகாரம் மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) ஒப்படைக்கப்படுகிறது” என கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.