2024-2025 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். முன்னதாக அவர், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெற்றார். இதையடுத்து, டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்திலும் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
மோடி தலைமையிலான அரசில் 2019இல் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டார். அது முதல் ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் அவர் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். அதன்படி இன்று 7வது முறையாக அவர் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதன்மூலம் தொடர்ந்து அதிக பட்ஜெட் தாக்கல் செய்த சாதனையை நிர்மலா படைத்துள்ளார். மொரார்ஜி தேசாய் 6 முறை தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்