மக்களவைத் தேர்தலில், வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரதமர் மோடி, எம்.பி.யாக பதவியேற்றார். புதிய நாடாளுமன்றத்தில் இன்று மக்களவை கூடிய நிலையில், இடைக்கால சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாபு, பிரதமர் மோடிக்கு பதவிப்பிரமானம் செய்துவைத்தார். அவரைத் தொடர்ந்து பாஜக உறுப்பினர் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக பதவியேற்கின்றனர். இன்று 280 எம்.பி.க்கள் பதவியேற்க உள்ளனர்.